தேவ பிள்ளைகள் எதற்காக அதிகமாக ஜெபிக்க வேண்டும்
கிறிஸ்துவின் ஆவியில் வளரவேண்டும். சத்திய வசனத்தின் இரகசியங்கள் அறியவேண்டும். ஜெபம் பக்திக்காக இல்லாமல் தேவனோடு உறவில் பலபட இருக்க வேண்டும்
கிறிஸ்துவின் ஆவி (கர்த்தரின் ஆவி)
2 கொரிந்தியர் 3 : 17 கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு . கர்த்தருடைய ஆவி நமக்குள் வர நாம் ஜெபிக்க வேண்டும். கிறிஸ்துவின் ஆவியில் வளரும் போது பாவத்தை மேற்கொள்ள முடியும், பாவத்தை மேற்கொள்ளாமல் பாவத்தோடு ஜெபித்தால் பலன் கிடையாது. (ரோமர் 8 : 1)
ரோமர் 7 : 19 வழ 25, ரோமர் 8 : 9 சத்திய வசனத்தை அறிகிற அறிவு
யோவான் 17 : 17 சத்தியத்தினாலே அவர்களை பரிசுத்தமாக்கும்
யோவான் 8 : 32 சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். நம் வாழ்வில் விடுதலைக்காக ஏங்கும் நாம் சத்திய ஆவியை பெற வேண்டும். அதற்கு ஜெபிக்க வேண்டும்.
பரிசுத்த ஆவி
அப்போஸ்தலர் 1 : 8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைந்து. சிறு ஜெபம் ஆயகாரன் - தேவனே பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்.10 குஷ்டரோகிகள் - இயேசு ஐயரே எங்களுக்கு இரங்கும். ( லூக்கா 17 : 13) திருடன் - உம்முடைய ராஜ்ஜியம் வரும் போது அடியேனை நினைத்தருளும்
பர்திமேயு - ஆண்டவரே நான் பார்வையடைய வேண்டும்.
பேதுரு - ஆண்டவரே இரட்சியும். (மத்தேயு 14 : 30)
ஆண்டவர் ஜெபத்தின் நீளத்தை பார்கிறது இல்லை உள்ளத்தை பார்கிறார். ஜெபம் செய்யும் போது மனம் திரும்பி தேவனுடைய பிள்ளைகள் என்ற ஆவிக்குரிய அந்தஸ்தை அடைய வேண்டும்.
பரிசுத்தமான தேவன் நாமும் பரிசுத்தர்களாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். (லேவி 20 : 26) எபிரெயர் 12 : 14 - பரிசுத்தமில்லாமல் ஒருவரும் தேவனை தரிசிக்க இயலாது.
தேவன் மேலானவைகளை வழங்குவதற்கே முன்னுரிமை கொடுக்கிறார். வேதமும் அதற்கு தான் நம்மை அழைக்கிறது. (கொலோசியர் 3 : 1 - 2 ), (மத்தேயு 6 : 33) தேவன் நம்முடைய பலவீனங்களை அறிந்து உதவி செய்ய விரும்புகின்றவரே. நாம் விழுந்தாலும் தூக்கி விடுவார். தைரியமாக தேவ சமுகத்தை நாட வேண்டும். நம் பலம் குன்றினாலும் அவர் நம்மை பலப்படுத்துவார். நம்முடைய ஜெபத்தில் உறுதியான நம்பிக்கை இல்லையென்றால் நம்முடைய இறை நம்பிக்கை வீண்.
ஜெபத்தில் பெற வேண்டிய வெற்றி
சிலருக்கு திறமை, அறிவு, உடல்சார்ந்த வெற்றிகள் மிகுந்த பாராட்டுகளை கொண்டுவருகிறது. ஆனால் தனிபட்ட வாழ்க்கையிலோ தோல்வி. மனரீதியான தோல்வி அவர்களை மகிழ்ச்சிக்கு தூரமாக்குகிறது.
என்ன அறிவு, என்ன ஞானம், என்ன புத்தி என்று சாலொமோனை உலகமே பாராட்டியது. ஆனால் அவனோ எல்லாம் மாயை, எல்லாம் மனதுக்கு சஞ்சலம் என்று புலம்புகிறான் (பிரசங்கி 1 : 14) தேவ உறவை தேடி அடையாத ஒரு தோல்வி வாழ்வில் அவனுக்கு இருந்தது. வசதி, அந்தஸ்து, நினைத்ததை சாதிப்பதில் ஜெயித்திருக்கலாம் ஆனால், சுபாவங்களை சரியாக வைப்பதில் ஜெயித்திருக்கிறோமா ? ஆசைகளை கட்டுக்குள் வைப்பதில் ஜெயித்திருக்கிறோமா? ஆகாத நினைவுகளை மேற்கொள்வதில் ஜெயித்திருக்கிறோமா? நாம் நம்மை சரியாக வைப்பதில் ஜெயித்திருக்கிறோமா ? என்று பார்க்க வேண்டும், இதில் ஜெயிப்பதற்கு நாம் ஜெபிக்க வேண்டும்.
கோபத்தில், வெறுப்பின் மேல், தவறான ஆசை, பெருமையின், ஆத்திர உணர்வின் வெற்றியில்லை, இதில் தோல்வியாக இருத்தால் வேறெந்த வெற்றியும் நம்மை மகிழ்விக்காது.
பவுல் எந்த நிலமையிலும் மனரம்மியமாக இருக்க கற்று கொண்டவன் (பிலிப்பு 4 : 11) எந்த சூழ்நிலையிலும் தன்னை சரியாக வைத்து கொள்வதில் வெற்றி கண்டவன்.
ஜெபத்தில் காத்திருத்தல்
சிலர் ஜெபம் செய்கிறோம், நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். ஏதோ ஒரு நன்மையான காரியத்திற்காக, ஆனால் நீண்ட காலமாகியும் காத்து கொண்டிருக்கிறோம். ஆனால் நம்மிடம் ஒரு மாற்றம் வர கர்த்தர் காத்திருக்கின்றார்.
நாம் நம்முடைய எதிர்பார்ப்புகளை முக்கியபடுத்துவதே, தேவனும் தம்முடைய எதிர்பார்ப்புகளை முக்கிய படுத்துகின்றார். கர்த்தருக்காக காத்திருப்பதில் உறுதியாயிருந்த ஏசாயா தீர்க்கதரிசி யாக்கோபின் குடும்பத்துக்கு தமது முகத்தை மறைக்கிற கர்த்தர் என்று குறிப்பிடுகிறான். (ஏசாயா 8 : 17)
ஏன் கர்த்தர், தம்முடைய ஜனங்களுக்கு முகத்தை மறைக்கிறார். தேவன் அவர்களிடம் ஒரு நல்ல மாற்றத்தையும், திருப்பத்தையும் காண்பதற்காக எதிர்நோக்கி கொண்டிருக்கின்றார். நாம் தேவனின் விருப்பத்தை, காத்திருக்குதலை உணராமல் நாம் நம்பிக்கையோடு காத்திருந்தாலும் பலன் இல்லை.
சிலர் அதிக நம்பிக்கை வைத்து நல்ல நாட்களை எதிர்நோக்கும் சிலரை பார்க்கின்றோம். (ஏசாயா 2 : 37) உன் நம்பிக்கைகளை கர்த்தர் வெறுத்திருக்கிறார். அவர்கள் கர்த்தருக்கேற்ற சத்தியம் சார்ந்த வாழ்க்கை வாழ ஆயத்தமாகவில்லை, தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ்வதென்றால் இன்னதென்றே அறியவில்லை.
தேவன் நாம் ஜெபிப்பதை, உபவாசிப்பதை, விசுவாசிப்பதை, நம்பிக்கையோடிருப்பதை பார்த்து விட்டார். ஆனால் நாம் பரிசுத்தமாய் வாழ்வதை பார்க்க அவர் விரும்புகிறார். நாம் வேத வார்த்தைகளின் படியான ஒரு சத்திய ஜீவியம் செய்வதை கர்த்தர் பார்க்க விரும்புகிறார் .
குன்றாத ஜெப வாழ்வு
பாடுகள், மனசோர்வுகள் நிகழும் போதும் நம்முடைய ஜெப வாழ்க்கை பலவீன படுமா ? தேவ கிருபை இருக்குமானால், அதிக பாடுகளிலும் ஜெபத்திலும் வேத தியானத்திலும் இருக்க முடியம். தாவீது பெரும்பாலான சங்கீதங்களில் வேதனையான நேரங்களில் தேவனை நோக்கி ஏறெடுத்த ஜெபங்கள் ஆகும். மிகுந்த நெருக்கங்களிலும் அவருடைய ஜெப வாழ்க்கை பாதிக்கவில்லை. வியாகுலத்தின் உச்சத்தில் இயேசு கெத்செமனேயில் ஜெபித்தார்.
பவுலும், சீலாவும் சிறையில் மிகுந்த வேதனைகளின் நடுவில் ஜெபித்தார்கள். தேவ ஐக்கிய வாழ்க்கை நமக்கு இருந்தால் எந்த துன்பத்தின் சூழ்நிலைகளிலும் ஜெபிக்க முடியும். சிலருக்கு சிறு கஷ்டங்கள் கூட ஜெபிக்க முடியாத படி செய்யும், அவர்கள் தேவ ஐயக்கியத்தில் பலபடவில்லை.
கஷ்டமான நிலைகளில் கர்த்தரை விட்டு விலகி சென்றால் (ஜெபத்தில்) நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை தேவ உறவின் அஸ்திபாரத்தின் மேல் கட்டபடாமலிருக்கிறது என்பதாகும்.
தேவ உறவில் நாம் வலிமையாக இருந்தால், கஷ்டங்களில் நம்மை அவரோடு கிட்டி சேர்க்குமேயன்றி தூரமாக போக செய்யாது.
பிரச்சனைகள் வரும் போது நாம் அதிகமான ஜெபத்தில் இருக்க வேண்டும். அந்த நேரத்தில் தான் நமக்கு ஆறுதல் அதிகமாக தேவைப்படுகிறது. இதை நாம் மறந்து விட கூடாது.
Write a public review