ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 24-Oct-2024



ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்

யோவான் 19: 26,27 இது ஆறுதல் இழந்தோரை ஆறுதல் படுத்தி ஆதரவு கொடுக்கும் வார்த்தை

யாத்திராகமம் 20  : 12

உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக, என்ற கட்டளையை இங்கே நிறைவேற்றுகிறார்.

நீதிமொழிகள்  20 : 20

தன் தகப்பனையும், தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அனைந்துபோம். வேத வாக்கியங்கள் நிறைவேறும் பொறுட்டு இங்கே இயேசு தனது தாய்க்கு ஆறுதலையும், கனத்தையும் கொடுக்க முடிகிறது. அனேகர் அதிகாரிகளுக்கும், போர்சேவகர்களுக்கும் பயந்து ஓடுகின்ற நிலையில் தாயார் மரியாளும், அன்பான சீஷன் யோவானும் சிலுவையின் அருகில் நிற்கிறவர்களாக பார்க்கிறோம்.

1 யோவான் 4 : 18

அன்பிலே பயமில்லை, பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும், பயமானது வேதனையுள்ளது பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல இருவரும் இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ள அன்பினாலே மிரட்டலுக்கு பயப்படாமல் இயேசுவின் அருகே நின்று கொண்டிருக்கிறார்கள்.

மரியாள்:

ஏற்கனவே தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டிருக்கிறது. லூக்கா 2 : 34, 35 உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான். இதை தாயாகிய மரியாளும் அறிந்திருந்தாள், இயேசுவுக்கும் இது தெரியும். அதே போல் மரியாளின் சிந்தனையில் தோன்றினவைகள்  இயேசு அறிந்திருந்தார்.

யோவான் 2 : 24, 25 மரியாளுக்கு ஒரு ஆறுதல் தேவைப்படுகிறது என்பதை அறிந்தவரான, தாயை நோக்கி ஸ்திரீயே, அதோ உன் மகன் என்றார்.


யோவான்:

மற்ற சீஷர்கள் ஓடி ஒளிந்து கொண்ட போதும் தைரியமாக இயேசுவின் அருகில் நின்றான். அதனால் ஆண்டவர் தன்னுடைய பொறுப்பை யோவானிடம் கொடுக்கிறார். முடிவுபரியந்தம் நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான் என்ற வேத வாக்கியத்துவம் ஆண்டவரோடு நிற்கிறதை பார்க்க முடிகிறது.

நமக்கு என்ன துன்பங்கள் வந்தாலும், கஷ்டங்கள் வந்தாலும் நாம் ஆண்டவரை விட்டு தூரம் போக கூடாது. யோவானை போல வைராக்கியமாக இருக்க வேண்டும். யோவான் ஆண்டவருடைய பாதத்தில் காத்து கிடக்கிறான். அதனால் ஆண்டவர் அவருக்கு வெளிப்பாட்டை கொடுத்து வெளிப்படுத்தின சுவிசேஷம்  எழுதப்பட்டது நாமும் இன்று அவருடைய பாதத்தில் காத்திருக்கும் போது நமக்கு நமது எதிர்காலத்தை குறித்து வெளிப்பாட்டை கொடுக்கிறார்.

நாம் இன்று சிலுவையின் அருகில் நின்று கொண்டிருக்கிறோமா அல்லது சிலுவையான தூரத்தில் நின்று கொண்டிருக்கிறோமா? யோவானும், மரியாளும் சிலுவையின் அருகில் இருந்ததினாலே யோவானுக்கு தாயும், மரியாளுக்கு ஒரு மகனும் கிடைக்கின்றன.

தேவ பிள்ளைகளே ஒருவேளை உங்கள் வாழ்வில் யாரும் இல்லை என்று எண்ணினால் நீங்கள் சிலுவையின் அருகில் வரும் போது நம் ஆண்டவர் சந்திப்பார். நாம் சிலுவையின் அருகில் போகும் போது அப்பா பிதாவே என்ற உறவு கிடைக்கிறது.

ஆண்டவருக்கு நாம் பிள்ளையாகிறோம்.











  :   11 Likes

  :   37 Views