தானியேல் 6: 10. "அங்கே தான் முன் செய்துவந்தபடியே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்."
தேசத்திலே யாரும் ஜெபிக்க கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டும், தானியல் ஜெபத்தை நிறுத்தவில்லை. தேவனோடு இருந்த உறவால், அவருடைய வல்லமையில் வாழ்ந்தான். தானியேல் தான் விசுவாசிகிற தேவன் யார் என்பதை அறிந்திருந்தார் .
தானியேல் ஜெபத்திலும் விசுவாசத்திலும் உறுதியாக இருந்தபடியினால், தானியேலின் இக்கட்டான சூழ்நிலையில் ஆண்டவருடைய நாமம் மகிமை படுகிறது. ஒரு சேதமும் தானியேலுக்கு ஏற்படாமல் சிங்க குகையில் தானியேல் கர்த்தரால் பாதுகாக்கப்பட்டார். ஆண்டவருடைய பாதுகாப்பு பரிபூர்ணமானது.
நாமும் கர்த்தருடைய நல்ல ஐக்கியத்தில், ஜெப வாழ்வில் இருக்கும் பொழுது, நம்முடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகள் வந்தாலும், அதிலிருந்து நம்மை பாதுகாக்க அவர் வல்லவராக இருக்கிறார். ஆமென்.
Write a public review