Sermons

வசனத்தின் வல்லமை

தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.   (நீதி 30:3)  

கர்த்தருடைய வசனம், அதன் மேன்மை மகத்துவத்தைக் குறித்து மறுபடியும், மறுபடியுமாக சொல்கிறது. தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள். அதாவது சுத்தமானவைகள். மேலும்  சங்கீதம் 12ல் 6ம் வசனம், கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்ன்றன. தேவனுடைய வார்த்தைகளில் குறை ஒன்றுமில்லை. 

ஆகவேதான் கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை  உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது  (சங்கீதம் 19:7)  தேவனுடைய வார்த்தையை நம்புங்கள். அதின் நம்பகத்தன்மையைக் குறித்து உறுதியாயிருங்கள். அதுவே நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் அஸ்திபாரமாயிருக்கிறது. 

வேத வசனங்கள் ஒவ்வொன்றும் தேவ ஆவியினாலே நமக்கு அருளப்பட்டிருக்கிறது, அதை நாம் விசுவாசித்து, அதிலே உறுதியாக இருப்போம். ஆமென்.  


Loading...