"என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்" (எரேமியா 33 : 3).
தேவனை
ஏன் நோக்கி தேட வேண்டும்?
1. மனிதனாக மாற வேண்டும்:
தேவன் படைத்த முதல் மனிதன் பாவத்தினால் தேவ சாயலை இழந்து போனான். இன்று மனிதன் மனிதனாக இல்லை. இயேசுவை ஏற்று கொண்டு மனிதனாக மாற வேண்டும்.
"தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார். அவனை தேவ சாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்" (ஆதியாகமம் 1:27).
"இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது" (2 பேதுரு 1:4).
தேவ சாயலை இழந்த மனிதன் இயேசுவினால் மெய்யான ஒளியை பெறுகிறான்.
"உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி" (யோவான் 1:9). தேவ ஒளியினால் பிரகாசிக்கப்பட்டு மனிதனாக மாற வேண்டும்.
2. வலிமையான
ஐக்கியம்:
சீஷர்கள் இயேசுவோடு இருப்பேன் என்று சொல்லி அவரை விட்டு ஓடி போனார்கள், ஆனால் பிதா அவரோடு இருந்தார் (யோவான் 16:32). நாம் இந்த நாளில் இயேசுவோடு ஒரு நல்ல ஐக்கியத்தில் சேர்ந்து இருக்க வேண்டும்.
3. தேவ
பயம்:
தேவபயம் வந்தால்,உலகபயம் மாறிவிடும். கர்த்தர் நமக்கு ஞானத்தை கொடுப்பார்.ஆண்டவர் நம்மை எப்பொழுதும் கண்காணிக்கிறார் என்ற பயம் நமக்கு இருக்க வேண்டும். அப்பொழுது தான் நாம் நீதியாக நேர்மையாக, பரிசுத்தமாக வாழ முடியும்.
பெரிய காரியம் கர்த்தர் செய்கிறார்:
நம் ஆண்டவர் வழிகளை திறப்பதில் ஆச்சரியமானவர், எல்லாபக்கங்களிலும் கதவுகள் அடைக்கபட்டிருந்தாலும், அவர் நமக்கு அற்புதம் செய்ய வல்லவராயிருக்கிறார். நம்முடைய வாழ்வில் ஒரு காரியத்தை வேண்டாம் என்று கர்த்தர் நிறுத்தினால், அதைவிட மேலான கரியத்தை செய்ய அவர் ஆவல் கொண்டிருக்கிறார்.
நம்முடைய மனிதமூளைக்கு சில விஷியங்கள் தெரியாமல் இருக்கும். ஆனால் ஞானம் என்றாலே அவர் தான். அவருக்கு எல்லாம் தெரியும். நமக்கு பெரிய காரியத்தை செய்ய வல்லவராயிருக்கிறார். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தைவிட்டு வெளியே வந்தபோது முன்னால் செங்கடல் குறுக்கிட்டது, இருபுறமும் மலைகள், பின்புறம் பார்வோனுடைய சேனைகள் வந்தன, தேவன் புதிதான ஒரு காரியத்தை அவர்கள் வாழ்க்கையில் செய்தார். செங்கடலை இரண்டாக பிளந்தார். கடலின் நடுவே வழியை உண்டாக்கினார். அவர்கள் சமுத்திரத்தில் நடந்து போனார்கள் (யாத்திராகமம் 14:22). அந்த தேவன் நம்முடைய தேவன், அவர் பட்சபாதம் உடையவர் அல்ல, நிச்சயமாக அவர் உங்களுக்கு அற்புதத்தை செய்வார்.
"ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்" (யோபு 9:10). மற்றவர்களை குறை கூற வேண்டாம், கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார். நம்முடைய வாழ்வில் சாத்தானால், இல்லை மனிதர்களால் பிரச்சனை வந்தாலும் ஆண்டவர் நம்மை ஆச்சரியமாக விடுவிப்பார். பிரச்சனை வலதுபுறமும், இடதுபுறமும் இருந்தாலும் அது நம்மை அனுகாது.
கர்த்தருடைய வாக்குதத்தத்தை நினைத்து அவரை நோக்கும் போது கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார். மலைகள் போல் பிரச்சனை வந்தாலும் அவை, பணிபோல் கரைந்து விடும். நம்முடைய ஆண்டவர் பெரியவர், அவரிடம் பெரிய காரியங்களை எதிர் பார்க்கலாம். நம்முடைய ஊழிய வல்லமையை வைத்து பார்க்க கூடாது. அவருடைய வல்லமையை வைத்து பார்க்க வேண்டும்.
மத்தேயு
8 : 23 - 27
இயேசு காற்றையும், கடலையும் அதட்டினார். உடனே மிகுந்த அமைதல் உண்டாயிற்று. இயேசு நம்மோடு இருக்கும் போது ஆபத்தின் விளிம்பிற்கு சென்றாலும் அவர் நம்மை பாதுகாக்க வல்லவ. நாம் அவரை விசுவாசிக்க வேண்டும். இயேசு கூட இருக்கும் போது நமக்கு பயம் தேவையில்லை.
விசுவாசம் முக்கியம், அற்பவிசுவாசம் தேவையில்லை. எல்லோரும் ஆச்சரியப்படுகிற அளவிற்கு இயேசு காரியங்களை செய்ய வல்லவராயிருக்கிறார். நம் வாழ்க்கையின் படகு எப்படி மூடப்பட்டதாய் இருந்தாலும் அவர் விடுவிப்பார். அவரை நாம் நோக்கி பார்க்கும் போது, நம் வாழ்வின் பிரச்சனை அவருக்குக் கீழ்ப்படியும்.
மத்தேயு 14 : 17 - 21
5 அப்பமும் 2 மீனும், ஸ்திரீகளும், பிள்ளைகளும் தவிர, 5000 புருஷர்களும் சாப்பிட்டு திருப்தி அடைந்தார்கள், இன்று நம் வாழ்வில் நாம் குறைவுற்றவர்களாக இருக்கலாம், இயேசு போஷிக்க வல்லவர். நம் குறைவுகளை அவர் பரிபூரணப் படுத்துகிறார். நம் குறைவில் நம்மை திருப்தி அடைய வைக்கிறார். நமக்கு போக மீதியானவற்றை நாம் எடுக்கமுடியும். நம் வாழ்க்கை வனாந்திரம் போல் இருந்தாலும் அவர் போஷிப்பார். நம்முடைய சூழ்நிலைகளை அறிந்து அவர் நமக்கு உதவி செய்கிறார். அவர் நம்மை வெறுமையாக அனுப்ப மாட்டார். நம்மிடம் ஒன்றும் இல்லை என்று எண்ணலாம், அவரை நோக்கி பார்க்கும் போது, ஆச்சரியமானதை செய்கிறார். எல்லா காலங்களிலும், நேரங்களிலும் அவர் அற்புதம் செய்ய வல்லவர்.
(i) முழு இருதயத்தோடு தேட வேண்டும் :
நாம் அவரை முழு இருதயத்தோடு தேடினால் அறியாததும், எட்டாததுமான பெரிய காரியங்களை செய்வார்.
(ii) பிரியமாய்
இருக்க வேண்டும்:
தேவனுடைய பார்வையில் நாம் பிரியமாய் இருந்தால் பெரிய காரியங்களை செய்வார் (தானியேல் 9:23).
(iii) கர்த்தருக்கு பயப்பட வேண்டும்:
"கர்த்தருடைய இரகசியம் அவருக்கு பயந்தவர்களிடத்தில் இருக்கிறது. அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்" (சங்கீதம் 25:14).