“அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்துக்கு உண்டானதெல்லாம் உன்னுடையதாயிற்று என்றான்” (2 சாமுவேல் 16:4).
தாவீது மிகப்பெரிய சிக்கலிலும், அச்சுறுத்தலிலும் இருக்கிறான். அவன் இதுவரை சந்தித்த நபர்களைக் காட்டிலும் முற்றிலும் வித்தியாசமான நபர்களைச் சந்திக்கிறான். இது தாவீதுக்கு மட்டுமல்ல, நமக்கும் பொருந்தும். எப்பொழுதெல்லாம் நாமும் சிக்கலில் இருக்கிறோமோ அப்பொழுதெல்லாம் நம்மைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும்படி பலர் புதிது புதிதாக முளைத்து வருகிறதைக் காணமுடியும். தாவீது இந்த அதிகாரத்தின் முற்பகுதியில், பொய்யனாகிய சீபா, அவதூறுபரப்புகிற சீமேயி, கோபக்காரனாகிய அபிசாய் ஆகியோரின் வார்த்தைகளைக் கேட்க நேர்ந்தது. தாவீது சிறுமைப்பட்டிருந்த நேரத்தில் இவர்களைச் சந்தித்ததுபோல, நாம் எப்பொழுதெல்லாம் சோர்ந்துபோய் இருக்கிறோமோ அப்பொழுதெல்லாம் இத்தகையோர் சந்திக்க வருவார்கள்.
சவுலின் மகன் யோனத்தானின் வேலைக்காரன் சீபா தாவீதைத் தன்னுடைய சுயநல இலாபத்துக்காகப் பயன்படுத்த வந்தான். தன் எஜமானன் மீது அவதூறு பரப்பி, தாவீதுடன் நெருக்கமாகி, மோவிபோசேத்தின் இடத்தை தனதாக்கிக்கொள்ள முயன்றான். இவனுக்கு உண்மையிலேயே தாவீதின் மேல் எவ்விதப் பற்றும் பாசமும் கிடையாது. ஆனால் மேவிபோசேத்துக்கு உரியதெல்லாம் தனக்கு வேண்டும் என்
நம்மை முகமுகமாய் எதிர்ப்பவர்களைக் காட்டிலும் இத்தகைய நடிப்பாளிகளுக்கு நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தாவீது இவனுடைய பேச்சில் மயங்கிவிட்டான். அவன் கூறுவது உண்மையா என இரண்டு மூன்று சாட்சிகளிடம் விசாரியாமல் அப்படியே நம்பிவிட்டான். நீதியின்படி தீர்ப்புச் செய்யாமல் தோற்றத்தின்படி தாவீது தீர்ப்புச் செய்தான். இப்படித்தான் நாமும் கிறிஸ்தவர்கள் என்