Sermons

சாத்தானை உங்களை விட்டு ஓட வைக்கும் ஒரு வசனம்

"ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்" (யாக்கோபு 4:7).

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவன் இன்று உங்களோடு இந்த வசனத்தின் மூலமாக பேச போகிறார். இதை நீங்கள் கவனமாக கேளுங்கள், இது ஆவிக்குரிய வல்லமை உள்ள செய்தி. ஒரு வேதாகம வசனம், ஆம் ஒரே ஒரு வசனம் சாத்தான் மிகுந்த வெறுப்புடன் இருப்பது உண்டு. காரணம் எளிது இந்த வசனம் நம்முடைய பயத்தை நொறுக்குகிறது. பொய்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது மற்றும் நீங்கள் யாருக்கு சொந்தமானவர் என்பதை அவனுக்கு நினைவூட்டுகிறது.

நீங்கள் ஆவிக்குரிய தாக்குதலை மேற்கொள்ளுகிறீர்களா? குழப்பம், மன அழுத்தம், சோர்வு அல்லது வாழ்க்கையில் சிக்கி தவிக்கிறீர்களா? அப்படி என்றால் இதை கவனமாக கேளுங்கள். நீங்கள் இன்று கேட்கப்போகும் செய்தி மிக முக்கியமானது. "ஆகையால் தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்" (யாக்கோபு 4:7). தேவனுக்குக் கீழ்ப்படியுங்கள். சாத்தான் உங்களை பயமுறுத்தி உங்கள் வாழ்க்கையை நான்தான் கட்டுப்படுத்துகிறேன் என்று உணர வைக்கின்றான்.

உங்களுக்கு வரும் பிரச்சனைகள், சோதனைகள், மன அழுத்தம், சந்தேகம் இவையே உங்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்று அவன் பொய் சொல்லுகிறான். ஆனால் வேதாகம் சொல்லுகிறது என்னவென்றால், இவைகளுக்கு உங்களிடம் எந்த அதிகாரமும் இல்லை. உங்களுடைய வாழ்க்கையை தேவன் ஒருவரே நடத்துகின்றார். நீங்கள் தேவனுக்குக் கீழ்படியுங்கள்.

அதாவது உங்கள் சித்தம் உங்கள் திட்டங்கள் உங்கள் நினைவுகள் எல்லாவற்றையும் தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான். பலர் தேவனுக்குக் கீழ்படியாமல் சாத்தானுக்கு எதிராக நிற்க முயற்சி செய்கிறார்கள். அங்கேயே அவர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள். ஆனால், நீங்கள் தேவனுக்குக் கீழ்படிந்தால் முழுமையாக ஒப்புக்கொடுத்துவிட்டால் ஆவிக்குரிய வல்லமையை பெறுவீர்கள். நீங்கள் உங்கள் வல்லமையில் போராடவில்லை அவருடைய வல்லமையில் தான் போராடுகிறீர்கள். சாத்தான் அதை வெறுக்கின்றான். ஏனெனில் நீங்கள் தேவனுடைய அதிகாரத்தில் நடக்க ஆரம்பித்து விட்டால் அவனுடைய யுத்தங்கள் வேலை செய்யாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! நான் உங்களை சவால் செய்கிறேன். இந்த வசனத்தை தினமும் பயன்படுத்துங்கள். அதை உங்கள் அறையில் சத்தமாக சொல்லுங்கள். ஒரு குறிப்புத்தாளில் எழுதி ஒட்டுங்கள். பொய்கள் மனதில் வரும்போது தியானியுங்கள். பலவீனமாக உணரும் போது சொல்லுங்கள். சோதனை வரும்போது சொல்லுங்கள். சூழ்நிலைகள் கடினமாக இருக்கும் பொழுது சொல்லுங்கள். யாக்கோபு நான்காம் அதிகாரம் ஏழாவது வசனம் தான் உங்கள் போர்குறல்.

ஆவிக்குரிய தாக்குதலில் இருக்கும் பொழுது நீண்ட ஜெபங்கள் தேவையில்லை. சில நேரங்களில் விசுவாசத்துடன் தேவனுடைய வசனத்தை அறிவிப்பதே போதும். உண்மையை சொல்லுகிறேன் சில இரவுகளில் நான் முற்றிலும் சோர்ந்து போனேன். பயம் என்னை பிடித்து நிறுத்த முயன்றது. ஆனால் நான் இந்த வசனத்தை சொன்னேன். அப்பொழுது அமைதி திரும்பியது. சூழ்நிலை மாறியது ஏனெனில் தேவனுடைய வசனம் உயிரோடு இருக்கிறது. அது உங்கள் பட்டயம், உங்கள் கேடகம், உங்கள் ஆயுதம் ஆகவே, சமீபத்தில் சாத்தான் உங்களை தொடர்ந்து தாக்குகிறான் என்று நினைத்தால் இன்று ஒரு தீர்மானம் எடுங்கள் என்னோடு சேர்ந்து சொல்லுங்கள் தேவனுக்கு கீழ்படிந்திருங்கள் பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடி போவான். இதுதான் உண்மையான வல்லமை. உங்களுக்கு தெரிந்த நபர் யாருக்கோ விடுதலை தேவைப்படுகிறது என்றால், இதை பகிருங்கள் மற்றும் எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் தேவனுடைய வசனத்தில் நிற்கும் போது உங்களுக்கு விரோதமாக உருவாக்கும் எந்த ஆயுதமும் வெற்றி பெறாது, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

Loading...