உன்னதப்பாட்டு 7 : 3
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 7 : 3

"உன் இரண்டு ஸ்தனங்களும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாயிருக்கிறது.”

இயேசு கிறிஸ்து இந்த வசனத்தில் தனது மணவாட்டி சபையை தாய்மைக்கும், ஆறுதல், போஷிப்பு மற்றும் தேற்றுவதற்கு ஒப்பிட்டு பேசுகிறார். 

"ஸ்தனம்” என்பது மார்பை குறிக்கும். இந்த வசனத்தை சிலர் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். நிச்சயமாக இல்லை. ஏன் என்றால்? இயேசு கிறிஸ்து தனது சிருஷ்டிப்பான மனுக்குலத்தை மனிதன் பார்க்கிற விதமாக பார்ப்பது இல்லை. அவர் மனிதனை தனது சாயலாக படைத்திருக்கிறார். அவர் சிருஷ்டிகர். இதை புரிந்து கொண்டு இந்த வசனத்தை நாம் தியானிக்க வேண்டும். மனித கண்ணோட்டத்தில் இதை பார்க்க கூடாது. அதேபோல் சாலொமோன் ஒரு பெண்ணை வர்ணித்த கவிதை இல்லை இது. கிறிஸ்து தனது சபையாகிய மணவாட்டியை வர்ணிப்பதாகும்.

இந்த வசனத்திற்கு ஆதாரமான தீர்க்கதரிசன வசனம்      ஏசாயா 66 : 10-13 -ல் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தையை கர்த்தரே சொல்லுகிறார் (ஏசாயா 66 : 12). தனுடைய அர்த்தம் என்னவென்றால், தனது பிள்ளைகளைப் போஷித்து காப்பாற்றும் தாய்க்கு சபை ஒப்பிடப்படுகிறது. அதேபோல் கர்த்தரை நேசிப்பவர்களுக்கும், சபையினிடத்தில் வருகின்ற புறஜாதிகளுக்கும் சபை சமாதானத்தையும், ஆறுதலையும் கொடுக்கும்  இடமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஒரு தாய் தேற்றுவது போல் கிறிஸ்து நம் ஒவ்வொருவரையும் தேற்றுகிறார் (ஏசாயா 66 : 13). ஸ்தனம் என்பதின் திர்க்கதரிசன வெளிப்பாடு ஏசாயா 66 : 10-13 -ன் படி ஆறுதல், போஷிப்பு மற்றும் தேற்றுவது ஆகும். 

மேலும் ஸ்தனம் என்பதின் ஆவிக்குரிய அர்த்தம் சபையினுடைய மார்க்கவசத்தைக் குறிக்கிறது.  "விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்." (1தெச 5 : 8). சபையே உங்களுக்கு அன்பும் விசுவாசமும் இருக்குமானால், நீங்கள் இயேசுவோடு சேர்ந்து காணப்படுகின்ற கனி கொடுக்கிற மந்தைகளாக இருப்பீர்கள். 

அன்பானவர்களே! சபையாகிய நாம் எல்லோரும் கிறிஸ்துவின் போஷிப்பையும், ஆறுதலையும் பெற்று மற்றவர்களை ஆவிக்குரிய போஷிப்பில், ஆற்றித் தேற்றி நடத்துவதால் வெளிமானின் குட்டிகளுக்கு சபையாகிய நாம் கிறிஸ்துவினால் ஒப்பிடப்படுகிறோம். வெளிமான் வேகமாக ஓடக்கூடிய மிருகம். அதே போல் கிறிஸ்துவின் சபையும் வேகமாக ருக்கிறது என்பதை உணர்த்துகிறார்.

நீங்கள் மற்றவர்களை சத்தியத்தில் வழி நடத்துகிறீர்களா?

குறிப்பு வசனம் :   ஏசாயா 66 : 10-12, உன் 7 : 3




  :   22 Likes

  :   111 Views