ஏழைகளை நேசியுங்கள்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



ஏழைகளை நேசியுங்கள்

யாக்கோபு  2:6. "நீங்களோ தரித்திரரைக் கனவீனம் பண்ணுகிறீர்கள்."  

தங்களை உயர்ந்த குடி மக்களாக அடையாளம் காட்டும் மனநிலை கொண்டவர்கள் அநேகர் உண்டு. மகிமை நிறைந்த தேவன் அற்பமான மனிதர்களை நேசித்து அவர்களில் ஒருவராக இந்த பூமிக்கு வந்தார். ஏழை குடும்பத்தில் பிறந்தார், ஏழைகளோடு வாழ்ந்தார். ஏழைகளுக்கு உதவி செய்தார், ஏழைகளை சீடர்களாக தேர்ந்தெடுத்து தம்மோடு வைத்துக்கொண்டார்.  

வேதத்திலே இயேசுகிறிஸ்து அனேக இடங்களிலேயே ஏழைகளுக்காக குரல் கொடுத்திருக்கிறார். ஏழைக்கு பெலனும், ஒடுக்கப்படுகிற எளியவனுக்கு திடனுமாய் இருக்கிரார். ஏழை விதவையின் காணிக்கையை அங்கீகரித்தவர், ஏழைகளுக்கு கொடுக்கிறவனுடைய நீதியை  என்றைக்கும்  நிற்க பண்ணுகிறவர்.

இந்த ஏழைகளின் நேசரை ஆராதிக்கும் நாம்,  ஏழைகளை நேசிக்கிறோமா?  ஏழைகளோடு சேர்ந்து காணப்படுவதை விரும்புகிறோமா? ஏழைகளுக்கு உதவி செய்கிறோமா? அவர்களுக்கும் சபைகளிலே முக்கியத்துவம் அளிக்கிறோமா?  ஏழைகளின் மேல் கிறிஸ்துவுக்கு இருந்த சிந்தை நம்மிடம் இருக்கிறதா? .ஆமென். 





  :   36 Likes

  :   125 Views