தேவ வசனம் நம்மை சுத்திகரிக்கும்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



தேவ வசனம் நம்மை சுத்திகரிக்கும்

சங்கீதம் 119: 9. "வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்கிறதினால் தானே."  

ஒரு இளைஞன் தன் வழியை எங்கே எவ்வாறு தன்னை தூய்மைப் படுத்துவான்?

 மனிதனின் இயல்புக்குள்ளேயே, தீட்டுப்படுத்தும் விஷயத்தை நோக்கி போகும் ஒரு போக்கு இருக்கிறது. செவ்வையான வழியில் நடப்பது கடினம் தான். ஒரு இளைஞன் தூண்டுதல்களை எவ்வாறு மேற்கொள்வான்?  

 தனது சொந்த ஞானத்தால் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று கனவு காணக்கூடாது;  இயேசு கிறிஸ்துவே உலகத்தையும், மாம்சத்தையும், இச்சைகளையும், பிசாசையும் ஜெயிக்க எனக்கு உதவக் கூடியவர் என்று அவர் பக்கமாக நாம் திரும்ப வேண்டும். 

 மனிதன்  இயேசு கிறிஸ்து கொடுக்கும் இரட்சிப்பினால் இளமையின் பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப்பட வேண்டும். மேலும் அவனுக்கு முன்  சோதனையை ஏற்படுத்தும் பாவங்களைத் தெளிவாக அறிந்து, கர்த்தருடைய வசனத்தை கொண்டு பாவம் செய்யும் மன நிலைமையில் இருந்து விடுதலை பெற வேண்டும். 

வேத வசனத்தை தியானிப்பது மூலமே நாம் இதிலிருந்து வெற்றி பெற முடியும். தியானிப்போம், வெற்றியை கர்த்தரிடம் இருந்து பெற்றுக் கொள்வோம், பரலோகம் சேர்வோம். அமென். 





  :   35 Likes

  :   121 Views