ஆண்டவராகிய
இயேசு கிறிஸ்து இன்று நம் ஒவ்வொருவரையும் நற்செய்தி அறிவிக்க அழைத்திருக்கிறார், இதை
நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
ஆண்டவர் இஸ்ரவேலருக்கு
கொடுக்கும் கானான் தேசத்தை சுற்றி பார்க்க இஸ்ரவேலின் எல்லா கோத்திரத்திலிருந்தும்
ஒரு மனிதனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மோசேக்கு கர்த்தர் கட்டளையிடுகிறார். அதேபோல
மோசே தேசத்தை சுற்றிப் பார்க்கும்படி அவர்களை அனுப்புகிறதை நாம் பார்க்கிறோம். எண்ணாகமம்
13:16 வது வசனத்தில் யோசுவாவை அவரோடு சிலரையும் மோசே அனுப்புகிறார்.
அவர்கள் 40
நாள் தேசத்தை சுற்றி பார்த்து 40 நாள் சென்ற பின்பு திரும்பினார்கள். அவர்கள் வந்து,
அது பாலும் தேனும் ஓடுகிற தேசம் அதனுடைய கனி என்று அவர்கள் மாதுளம் பழம் மற்றும் திராட்சை
பழத்தை கொண்டு வந்து கொடுத்தார்கள் (எண்ணாகமம் 13:23-27). காலேப் மோசேக்கு
முன்பாக ஜனங்களை அமர்த்தி நாம் உடனே போய் சுதந்தரித்து அதை எளிதாய் ஜெயித்துக் கொள்வோம்
என்றான். ஆனால் அவரோடு போய் சுற்றிப் பார்த்த சிலர் துற்செய்தியை அங்கே கூறுகிறதை நாம்
பார்க்க முடிகிறது (எண்ணாகமம் 13:33). அதாவது அங்கே அந்த ஜனங்களை நாம் ஜெயிக்க
முடியாது அவர்கள் பலவான்கள், அவர்கள் ராட்சசப் பிறவி என்று அவர்களைப் பார்த்து பயந்து
துற்செய்தியை அங்கே கூறுகிறதை நாம் பார்க்கிறோம்.
துர்ச்செய்தியைக் கேட்டவர்கள் பயந்து முறு முறுக்க
ஆரம்பித்து நாம் இதற்கு எகிப்திலே இருந்திருக்கலாம் என்று அவர்கள் வாயினால் அறிக்கையிட்டு
தேவனை துக்கப்படுத்தினதை எண்ணாகமம் 14:1 முதல் 10
ஆனால் ஆண்டவர் அவருடைய குழந்தைகளை நான் அதிலே பிரவேசிக்க
செய்வேன் என்று சொல்லி அந்தக் குழந்தைகளை அவர் ஆசீர்வதிக்கிறதை அங்கே பார்க்க முடிகிறது(எண்ணாகமம்
14:31). எலியா துற்செய்தியைக் கேட்ட பொழுது பயந்தார். ஆனால் அவர் நற்செய்தி அறிவிக்கும்
போது வல்லமையான காரியங்கள் அவரைக் கொண்டு ஆண்டவர் செய்தார். இன்றைக்கு நாம் நற்செய்தி
அறிவிக்கிறவர்களாக மாறுவோம். துற்செய்தியை கேட்டால் பயப்பட வேண்டாம் அதை நிராகரிப்போம்.
Write a public review