கிறிஸ்துமஸ் என்பது 'தேவன் நம்மோடு இருக்கிறார்' என்பதைக் குறிக்கிறது; ஈஸ்டர் என்பது 'தேவன் நமக்காக இருக்கிறார்' என்பதைக் குறிக்கிறது; பெந்தெகோஸ்தே என்பது 'தேவன் நமக்குள்ளே இருக்கிறார்' என்பதைக் குறிக்கிறது.
பெந்தேகோஸ்தே நாள் என்பது, புதிய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுகிற எல்லா சபையின் பிறந்தநாள் ஆகும்.
கிறிஸ்தவ வாழ்க்கை சிலுவையில் தொடங்கி ஜீவக்கிரீடத்தில் போய் முடியும்.
God doesn't want a contribution... But a surrendered life...
வேதத்தில் எனக்கு பிடித்த சிறந்த ஜெபம்...
தேவனே! பாவியாகிய என் மேல் கிருபையாயிரும் லூக்கா 18:13
வெளிப்படுத்த முடியாத பெருமூச்சுகள், பெரும்பாலும் மறுக்க முடியாத பிரார்த்தனைகளாகும். ஒருவன் மண்டியிட்டுச் செலவிடும் நேரத்தை விடச் சிறந்த நேரம் வேறில்லை.
நான் உணர்ந்து கொண்ட உண்மை....
நான் வலிமையானவன் என்பதாலோ அல்லது எல்லாவற்றையும் சரியாகச் செய்துகொள்பவன் என்பதாலோ கிறிஸ்தவன் அல்ல.
நான் பலவீனமானவன் என்பதாலும், மனிதன் என்பதினாலும், எனக்கு ஒரு இரட்சகர் தேவை என்பதை ஒப்புக்கொள்வதாலும் கிறிஸ்தவனாக இருக்கிறேன்.
"இயேசு கிறிஸ்துவே என் இரட்சகர்"
"ஒரு கிறிஸ்தவராக இருப்பது என்பது, மன்னிக்க முடியாததை மன்னிப்பதாகும்; ஏனெனில், உங்களில் உள்ள மன்னிக்க முடியாதவற்றைக் இயேசு கிறிஸ்து மன்னித்திருக்கிறார்."
"நமக்கு நன்கு தெரிந்த இயேசு கிறிஸ்துவிடம், நமக்குத் தெரியாத எதிர்காலத்தை ஒப்படைக்க ஒருபோதும் அஞ்சாதீர்கள்."
"கிறிஸ்தவராக மாறுவது ஒரு கணத்தில் நிகழும் செயல்; ஆனால் கிறிஸ்தவராக வாழ்வதோ வாழ்நாள் முழுவதும் தொடரும் செயல்."
"சூழ்நிலைகள் கட்டுப்பாட்டை மீறிச் செல்வது போல் தோன்றினாலும், திரைக்குப் பின்னால் தனது அதிகாரத்தை விட்டுக்கொடுக்காத ஒரு இயேசு கிறிஸ்து இருக்கிறார்."
அன்பு இல்லாமல் கொடுக்கலாம், ஆனால் கொடுக்காமல் அன்பு செலுத்த முடியாது.
கிறிஸ்து தம்மைத் தவிர வேறு வழியில் நமக்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் தர முடியாது, ஏனெனில் அப்படி ஒன்று இல்லை.
நாம் விலக வேண்டிய காரியமும் உண்டு (Ex ஆபிரகாம் - லோத்து)..
நம்மை விட்டு விலக்க வேண்டிய காரியமும் உண்டு.(1 பேதுரு 2:11)
கிறிஸ்துவின் கிருபையை உண்மையாகவே சுவைத்த இதயம், இயல்பாகவே பாவத்தை வெறுக்கும்.
நாம் சௌகரியமாக இருப்பதற்காக மட்டுமல்ல, மாறாக மற்றவர்களுக்கு ஆறுதல் அளிப்பவர்களாக நம்மை மாற்றுவதற்காகவே, தேவன் நமக்கு ஆறுதல் அளிக்கிறார்.
விசுவாசத்தில் உறுதியான கிறிஸ்தவர்கள், கிறிஸ்து தங்கள் வாழ்வில் அனுமதிக்கும் எதையும் ஏற்றுக்கொள்வதன் மூலம் வளர்ச்சியடைகிறார்கள்.
ஜெபம் இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுகிறது: மனிதனுக்கு ஆசீர்வாதம் மற்றும் கர்த்தருக்கு மகிமை.
கிறிஸ்துவுடன் அமைந்த வாழ்வு : நம்பிக்கையுடன் விதைத்ததைச் சந்தேகத்துடன் தோண்டி எடுக்காதே.
சில சமயங்களில், கூட்டத்தை விட தனிமை சிறந்தது; பேச்சை விட மௌனம் ஞானமானது.
விசுவாசம் என்பது இயேசு கிறிஸ்துவின் மீது வைக்கப்படும் ஒரு உயிருள்ள, துணிச்சலான நம்பிக்கை; அது எந்த அளவுக்கு உறுதியானது என்றால், ஒருவன் தன் உயிரையே அதன் மீது ஆயிரம் முறை பணயம் வைக்கக் கூடும்.
அமைதி என்பது துன்பங்கள் இல்லாத நிலையிலிருந்து வருவதில்லை, மாறாக இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்திலிருந்தே வருகிறது.
கிறிஸ்தவராக வாழ்வதைவிட கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ்வது சிறந்தது.
என் வாழ்க்கையில் நான் இயேசுவை நன்றாக அறிந்து (புரிந்து) கொண்ட வேளை....., என்னுடைய துன்பங்கள், பாடுகள் மற்றும் பலவீனங்களில் தான். இந்த சூழலில் எனக்கு உதவி செய்தார். என் கண்களால் பார்க்க முடிந்தது , உள்ளத்தில் உணர்ந்து கொள்ள முடிந்தது. அந்த அன்பை விவரிக்க முடியவில்லை....
திருமணம் உங்கள் வாழ்க்கையைச் சிதைக்கலாம் அல்லது சிறப்பாக்கலாம்; சிதைந்ததை சிறப்பாக்க இயேசு கிறிஸ்துவால் முடியும். அதற்கு பொறுமையும், காலமும், கர்த்தருக்கு காத்திருப்பும் அவசியம்...
இயேசுவோடு எப்படி வாழ வேண்டும் என்று தெரிந்து விட்டால் வெற்றி மட்டும் தான். அது சரியாக தெரியாமல் தான் இத்தனை பாடுகள் பிரச்சனைகள் மனிதனுக்கு.., கர்த்தர் அறிகிற அறிவில் வளருவோம்.
புல்லுள்ள இடமாக இருந்தாலும் சரி, மரண பள்ளத்தாக்காக இருந்தாலும் சரி தாவீது கர்த்தருக்கு சாட்சியாக இருந்தார். தேவன் தேடுகிற மனிதர் இன்றைக்கு இப்படிப்பட்டவரை தான்....
மன்னிப்பது - ஒருவேளை அந்த மனிதர்கள் அந்த மன்னிப்புக்கு தகுதி இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால் நாம் நம்முடைய சமாதானத்திற்கு தகுதியானவர்கள்.
யாரையாவது மன்னிக்க முடியவில்லை என்றால், அவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். நீங்கள் உடனே அவர்களை மன்னித்து விடுவீர்கள். இது என்னுடைய அனுபவம்
நற்செய்தி சரியான நேரத்தில் சென்றடைந்தால் மட்டுமே அது ஒரு நற்செய்தியாகும்.
இயேசு கிறிஸ்துவை பின் தொடர்வதற்கு எடுத்துக்காட்டு ரூத்... எல்லா சூழலிலும் ரூத் நகோமியை பின் தொடர்ந்தார். அதே போல் உண்மையுள்ளவளாக இருந்தாள். இறுதியில் ஆசீர்வதிக்கப்பட்டாள்.
பரிசுத்த வேதாகமம் என்பது பரிசீலிக்கப்பட வேண்டிய ஒரு விருப்பத் தேர்வு அல்ல; அது கீழ்ப்படியப்பட வேண்டிய ஒரு கட்டளை.
கிறிஸ்தவர்கள் இயேசுவை சரியாக அறியவில்லை என்றால், இந்த உலகம் அவரை அறிந்து கொள்ள இயலாது.
அழைக்கப்படவில்லை!' என்று சொன்னீர்களா? 'அழைப்பைக் கேட்கவில்லை,' என்றுதான் நீங்கள் சொல்ல வேண்டும் என நான் நினைக்கிறேன்.
வேதாகமத்தின் கடைசிப் பக்கத்தை நான் வாசித்திருக்கிறேன். கடைசியில் அனைத்தும் நன்மையாகவே முடியும்.
கர்த்தருடைய வசனமே... கர்த்தருடைய சித்தம்
கிறிஸ்து தனது எதிரிகளை நசுக்குவதன் மூலம் அல்ல, மாறாக நசுக்கப்பட்டவர்களை மீட்பதன் மூலமே உன்னத வெற்றியை அடைகிறார்.
கிறிஸ்துவுக்குள் நாம் உயர்த்தப்பட, கிறிஸ்துவுக்குள் நாம் நம்மை தாழ்த்த வேண்டும்.. வேறு எந்த வழியும் இல்லை...
கிறிஸ்துவின் மகிமையை விரும்பி வாழ்ந்தால், உலகத்தில் வரும் பாடுகள் பெரிதாக தெரியாது...
கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு மட்டுமல்ல, கிறிஸ்தவர்களாக வாழ்வதற்கும் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வது என்பது பரிசுத்தத்திற்காகப் பிரயாசப்படுவதாகும்.
மாற்றமடைந்த மனிதன்... மற்றவர்கள் வெறுக்கும்போதும் அன்பு செலுத்துகிறான். மற்றவர்கள் பாரபட்சத்துடன் இருக்கும்போது அவர் நீதியுடன் செயல்படுகிறார்; மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்ளும்போது அவர் புரிதலுடன் நடந்துகொள்கிறார்; மற்றவர்கள் பதற்றமடையும்போது அவர் நிதானத்தைக் கடைப்பிடிக்கிறார்.
சிலர் வாழ்க்கையின் முடிவை நம்பிக்கையற்ற ஒன்றாகவே பார்க்கிறார். ஆனால் கிறிஸ்தவரோ முடிவில்லாத நம்பிக்கையைக் காண்கிறார்.
வெறுமை, தனிமை, வேதனை, குற்ற உணர்வு, இழப்பு மற்றும் துன்பம் நிறைந்த இந்த உலகில், தேவன் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஆதரவாக இருக்கிறார் என்பதை அறிவது ஒரு உன்னதமான விஷயமாகும்.
நாம் பேசும் வார்த்தைகளை விட, நாம் வாழும் விதமே பெரும்பாலும் அதிக நம்பகத்தன்மை வாய்ந்ததாக அமைகிறது.
ஒருமுறை நீங்கள் சிலுவையைச் சந்தித்துவிட்டால், அதன்பிறகு நீங்கள் முன்பிருந்த அதே நபராக இருக்கமாட்டீர்கள்.
உலகமெல்லாம் போய் , இறைவனைக் குறித்துக் கற்றாலும், இருதயத்திற்குள் அவரைப் பெற்றால்தான் அந்த அறிவு பலன் தரும்.
Write a public review