இரட்சிப்பு மற்றும் அதன் ரகசியம்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



இரட்சிப்பு மற்றும் அதன் ரகசியம்

இயேசு என்ற பெயரிலே இரட்சிப்பு உள்ளது (மத்தேயு 1 : 21): 

இரட்சிப்பு: அவருடைய நியாயத்தீர்ப்பின் நாளில் அவருடைய கோபாக்கினையிலிருந்து காப்பாத்தபடுவது.

எப்படி பெறுவது: இயேசுவை விசுவாசித்து பாவ வாழ்க்கையிலிருந்து மனந்திரும்பி இரட்சிப்பை பெறலாம்.

இரட்சிப்பை முழுமையாக்குவதற்கு நம்மிடம் காணப்பட வேண்டிய இயேசுவுடைய தன்மைகள்:

1.நீதிமானாகுதல்:

தேவன் நீதியுள்ளவர், நியாயபிரமாண சட்டத்திலிருந்து நாம் இரக்கத்தை பெறுவதற்கு தன்னுடைய குமாரனை பூமிக்கு அனுப்பினார். ஆதாமின் கீழ்படியாமையால் உலகத்தில் பாவம் வந்தது (ரோமர் 5:8, ரோமர் 4:25). ஆதாம் தன்னுடைய சாயலாக சேத்தை  பெற்றவர் (ஆதியாகமம்  5:3).

இயேசு கிறிஸ்துவிளன் இரத்தம் நம்மை சுத்திகரித்து நீதியாக்குகிறது.

2. பரிசுத்தமாக்கப்படுல்:

"நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்" (சங்கீதம் 119:11).

3. மகிமையாகுதல்:

"நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்" (ஏசாயா 42 : 8).

"நாம் ஒன்றாயிருக்கிறதுபோல: அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்" (யோவான் 17 : 22).

எது இரட்சிப்பு -வேதத்திலுள்ள சம்பவங்கள்

1) சகேயுவின் வாழ்க்கை

"சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்" (லூக்கா 19:8).

"இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே" (லூக்கா 19:9).

பாவத்தை அறிக்கையிடுதல், வீட்டிற்கு இரட்சிப்பைக்  கொண்டு வரும்.

2) நரகத்தின் மகனாக்குதல் (மத்தேயு 23 : 15):

நரகத்தின் இரட்டிப்பான மகனாக்குதல், ஒருவர் கிறிஸ்துவ மதத்தில் சேர்வதில் பயனில்லை, மனந்திரும்ப வேண்டும் (லூக்கா 15 : 7).

3) தன்னை தானே நீதிமானாக்குதல்: 

"அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது" (லூக்கா 16:15).

தம்மை தாமே நீதிமானாய் காட்டுகிறது. தன்னுடைய குறைவை ஒத்து கொள்கிறது இல்லை (ஆதியாகமம் 3 : 12).

4) பரிசேயன் மற்றும் ஆயக்காரன், ஆயக்காரன் நீதிமானாக்கபடுதல் (லூக்கா 18:10 - 14):

"இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்."

"பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்."

"வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்."

"ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்."

"அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்."

5) விசுவாசித்து ஞானஸ்தானம் பெறுதல் (மாற்கு 16 : 16):

"விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்."

6) மனந்திரும்புங்கள்:

"அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்."(மத்தேயு 4 : 17).

இரட்சிப்பின் இரகசியம்:

1) கடந்த கால இரட்சிப்பு:

  • இது பாவ தண்டனையிலிருந்து நம்மை இரட்சிக்கும். இதற்கு பொதுவான இரட்சிப்பு என்று வேதத்தில் உள்ளது (யூதா 1:3).

  • பாவத்திலிருந்து மனந்திரும்புதல், எல்லா பாவத்தையும் ஜெயித்து விட்டேன் என்று பொருள் அல்ல, பாவத்தை நேசிக்க கூடிய மனநிலமையிலிருந்து  மனம் மாறுதல்.

  • "கிருபையினாலே விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்படுகிறது" (எபேசியர் 2:8).

  • "இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;" ( ரோமர் 3 : 24).

  • "இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே" (ரோமர் 5 : 9).

  • நமது பாவங்கள் சமுத்திரத்தின் ஆழங்களில் போடப்படுகிறது (மீகா 7 : 19 ).

  • "நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்" (ஏசாயா 43 : 25).

  • கிழக்கிற்கும், மேற்கிற்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரம் நமது பாவம் நீக்கப்படுகிறது (சங்கீதம் 103:12).

2) நிகழ்கால இரட்சிப்பு:

  • இது நம்மை பாவ வல்லமையிலிருந்து இரட்சிக்கும்.
  • சிலுவை உபதேசம் இரட்சிக்கபடுகிற நமக்கு தேவ பெலனாயிருக்கிறது (1 கொரிந்தியர் 1 : 18).

  • உங்கள் இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படுங்கள் (பிலிப்பியர் 2:12).

  • ஆண்டவரை ருசி பார்த்தவர்கள், அவரை மறுபடியும் சிலுவையில் அறைகிறார்கள் (எபிரேயர் 6 : 3 to 6).

  • உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும், அவைகளில் சிக்கிக்கொண்டால், அவர்களின் பின்னிலமை முன்னிலமையிலும் கேடுள்ளதாயிருக்கும் (2பேதுரு 2:20,21).

3) எதிர்கால இரட்சிப்பு:

  • பாவ உலகத்தை விட்டு நம்மை இரட்சிக்கும்.

  • காத்து கொண்டு இருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும் படி இரண்டாம் தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.

  • கடைசி காலத்தில் வெளிபட போகிற இரட்சிப்பு (1 பேதுரு 1:5).

  • நாம் அவருடைய மகிமைக்கு புகழ்ச்சியாக மீட்கப்படுவோம், ஆவியானவர் நமது சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார் (எபேசியர் 1:14).

  • விளைவு - ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளபட்டு அவருடனே இருப்போம்.

  • நித்திய இரட்சிப்பை பெற காரணமாக இருக்கிறார் (எபிரேயர் 5:8, 9).

  • இஸ்ரவேலே கர்த்தராலே நித்திய இரட்சிப்பினால் இரட்சிக்கப்படுவார் (சாயா 45:17).

  • முடிவு பரியந்தம் நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான் (மத்தேயு 24:3).




  :   18 Likes

  :   107 Views