தேவ சாயலில் இருக்கிறோம்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



தேவ சாயலில் இருக்கிறோம்

ஆதி 1:27 "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்."  

தேவ சாயலில் படைக்கப்பட்ட நாம், தேவனை போன்று இருக்க வேண்டும். நீதி, நேர்மை, பரிசுத்தம், ஆவியின் கனி, ஆவியின் வரங்களை உடையவர்களாய் இருப்போம் என்று நினைத்தே தேவன் சிருஷ்டித்தார். 

நாம் எல்லாவற்றிற்காகவும் பெருமைப்படுகிறோம். ஆனால் மகிமையான தேவ சாயலில் இருப்பதை அதிகமாக உணராது இருக்கிறோம். தேவன் நம்மை மகிமையோடு சிருஷ்டித்தது மட்டுமல்லாது,  ஆதி. 1:28 ல் " பூமியின்மேல்  சகல ஜீவ ஜந்துக்களையும் ஆண்டு கொள்ளுங்கள் என்று ஆசீர்வதித்தார்." 

ஒரு சிருஷ்டிப்பான ரோபோவை சிருஷ்டித்த மனிதன், அது தனக்கு கீழ்ப்படிந்து, தான் விரும்பியதை செய்ய வேண்டும் என்று நினைப்பது இயற்கைதானே. அது தவறுமானால் சிருஷ்டித்தவன் துக்கமடைவானே!!! 

அதைப் போன்று, மனிதரான நாம் தவறினால் ஆதி. 6:6 "  மனுஷனை உண்டாக்கினதற்காக கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. அதனால் உலகத்தை ஜலத்தினால் அழித்தார்.  ஆதி. 1:31ல்  மிகவும் நன்றாகயிருந்தது" அழிக்கப்பட்டது. 

சிந்தித்து செயல்படுவோம்: தேவனுடைய சாயலில் படைக்கப்பட்ட நாம்: பரிசுத்தமாய் வாழ்ந்து அவரை சந்தோஷப்படுத்துகிறோமா? அல்லது, பாவியாய் அவர் இருதயத்தை விசனமடைய செய்கிறோமா? 





  :   17 Likes

  :   101 Views